tamilnadu

img

ஜெர்மன் கிராண்ட்பிரிக்ஸ் வெர்ஸ்டாப்பென் அசத்தல்

பிரபல கார் பந்தய தொடரான பார்முலா 1 தொடரின் நடப்பாண்டு சீசனில் இதுவரை 10 கிராண்ட்பிரிக்ஸ் தொடர்கள் நிறைவு பெற்றுள்ளன. 11-வது  கிராண்ட்பிரிக்ஸ் ஜெர்மனி நாட்டில் நடைபெற்றது.    ஹோக்கன்ஹெய்ம் நகரில் ஞாயிறன்று (இந்திய நேரப்படி) நடைபெற்ற இறுதி சுற்றில் பலத்த மழை பெய்த பொழுதிலும் ரத்து செய்யப்படாமல் தொடர்ந்து நடைபெற்ற இந்த போட்டியில் ரெட்புல் அணியின் மாக்ஸ் வெர்ஸ்டாப்பென் (1:44:31) முதலிடம் பிடித்தார்.   பெராரி வீரர் செபாஸ்டியன் வெட்டல் (1:51:33) இரண்டாவது இடத்தையும், டோரோ ரோசோவின் டேனில் குவெயாத் (1:52:30) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.     ஜெர்மன் கிராண்ட்பிரிக்ஸில் சொதப்பினா லும் பட்டத்துக்கான புள்ளி பட்டியலில் மெர்சிடஸ் அணி வீரர்களான ஹாமில்டன் (225), போட்டாஸ் (184) ஆகியோர் முதலிரண்டு இடத்தில் உள்ளனர். ரெட்புல் அணி வீரர் மாக்ஸ் வெர்ஸ்டாப்பென் (162) மூன்றாவது இடத்தில் உள்ளார். நட்சத்திர வீரர் செபாஸ்டியன் வெட்டல் (141) நான்காவது இடத்தில் உள்ளார்.12வது கிராண்ட்பிரிக்ஸ் ஹங்கேரி நாட்டில் நடை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.